
மட்டக்களப்பு – திருகோணமலை பிரதான வீதியில் இன்று புதன் கிழமை நண்பகல் 12 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.
முச்சக்கர வண்டி ஒன்று மோட்டார் சைக்கிளுடன் மோதியே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
மட்டக்களப்பு தாண்டவன்வெளி சந்தியில் குறித்த மோட்டார் சைக்கிள், கிளை வீதியில் இருந்து பிரதான வீதிக்கு மாற முற்பட்ட வேளையில், முச்சக்கரவண்டி மோட்டார் சைக்கிளை மோதியதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்போது மோட்டார் சைக்கிளில் பயணித்த முதியவர் ஒருவரும் சிறுமி ஒருவரும் காயமடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
விபத்தில் முச்சக்கரவண்டியும் மோட்டார் சைக்கிளும் பலத்த சேதங்களுக்குள்ளாகியுள்ளது.
விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.