
மட்டக்களப்பு, கோட்டைமுனை ஸ்ரீ மஹா மாரியம்மன் ஆலய இரதோற்சவம்
மட்டக்களப்பு, கோட்டைமுனை, புன்னையம்பதி அருள்மிகு ஸ்ரீ மஹா மாரியம்மன் ஆலய இரதோற்சவம் இன்று வியாழக்கிழமை காலை 9 மணியளவில் இடம்பெற்றது.
வருடாந்த மஹோற்சவ விஞ்ஞாபனத்தின் துவஜாரோகணம் கடந்த 2ஆம் திகதி நண்பகல் 12 மணிக்கு ஆரம்பமாகி இன்று வியாழக்கிழமை 9 மணியளவில் இரதோற்சவம் இடம்பெற்றது.
இந்நிலையில் தீர்தோற்சவமும் துவஜாவரோகணமும் நாளை வெள்ளிக்கிழமை காலை 7 மணி தொடக்கம் மாலை 6 மணி வரை இடம்பெறவுள்ளது.
மேலும் மணவாளக்கோலம் சங்காபிஷேகம் நாளை மறு தினம் சனிக்கிழமை இடம்பெறவுள்ளது.
இதன்போது பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த பக்தர்கள் கலந்து கொண்டனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்