மட்டக்களப்பு குறுகிய தூர ரயில் சேவை மறு அறிவித்தல் வரை இரத்து

மட்டக்களப்பிலிருந்து பயணிக்கும் குறுகிய ரயில் சேவைகள் மறு அறிவித்தல் வரை நிறுத்தப்பட்டுள்ள அதே வேளை கொழும்புக்கான ரயில் சேவை வழமை போன்று இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சித்திரை புதுவருடம் காரணமாக மட்டக்களப்பு – மாகோ, மட்டக்களப்பு குறுகிய தூர ரயில் சேவை இன்று ஞாயிற்றுக்கிழமை தொடக்கம் மறு அறிவித்தல் வரை இரத்து செய்யப்பட்டுள்ளது.

மேலும் இன்று காலை 11.15 மணிக்கு மாகோ புகையிரதம் சேவையில் ஈடுபடாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை கொழும்புக்கான அனைத்து சேவைகளும் வழமை போன்று இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

மின்னல்24 இணைய வானொலி
கேட்க கிளிக் செய்க