
மட்டக்களப்பு கல்லடியில் இடம்பெற்ற கிளீன் ஸ்ரீ லங்கா நிகழ்வு
மட்டக்களப்பு கல்லடியில் வெள்ளிக்கிழமை காலை 11 மணியளவில் கிளீன் ஸ்ரீ லங்கா நிகழ்ச்சி திட்டம் பாலர் பாடசாலை கிழக்கு மாகாண தலைமை காரியாலயத்தில் இடம்பெற்றது.
கிழக்கு மாகாண பாலர் பாடசாலைக் கல்வி பணியகத்தின் தவிசாளர் எம்.ஏ.அமிர்டீன் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் எவ்வாறு தோட்டங்கள் அமைப்பது, கழிவுப் பொருட்களை எவ்வாறு மீள பயன்படுத்துதல் போன்ற விடயங்கள் தொடர்பில் தெளிவுபடுத்தப்பட்டது.
இதேவேளை இங்கு கருத்து தெரிவித்த தவிசாளர் எம்.ஏ.அமிர்டீன், என்.வி.கியூ டிப்ளோமா முன்பள்ளி ஆசிரியர்கள், முன்பள்ளி தொடர்பான செயற்பாடுகளில் ஐனாதிபதி மற்றும் பிரதமர் ஆர்வத்துடன் சேர்ந்து செயற்படுவதற்கு தயாராக இருப்பதாக தெரிவித்தார்.
நிகழ்வில் மாவட்ட செயலாற்று பணிப்பாளர் பி.பத்மநாதன், ரி.திலகநாதன் கிளீன் ஸ்ரீ லங்கா மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளர், தேசிய ஐக்கிய மக்கள் சக்தி மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர், நிறைவேற்றுக்குழு உறுப்பினர்கள், தலைமை காரியாலய உத்தியோகத்தர்கள், மாவட்ட அலுவலக உத்தியோகத்தர்கள் மற்றும் பாலர் பாடசாலை ஆசிரியர்கள் கலந்து கொண்டார்கள்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்