மட்டக்களப்பு – கல்முனை வீதியில் பதற்ற நிலை : போக்குவரத்து பாதிப்பு

கல்முனை வடக்கு பிரதேச செயலகத்துக்கு முன்பாக பாரிய ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளமையினால் மட்டக்களப்பு – கல்முனை பிரதான வீதியின் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டுள்ளது.

அத்துடன் பிரதேச செயலகத்தின் நுழைவாயிலையும் பூட்டிய நிலையில், அதிகாரிகளை உள்நுழைய விடாமல் பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்

கல்முனை வடக்கு பிரதேச செயலகத்துக்கு எதிராக இடம்பெறும் நிர்வாக அடக்குமுறைகளை கண்டித்தும், அதற்கான உரிய தீர்வு கோரியும், தொடர்ச்சியாக 92 நாட்களாக போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில், இன்று பாரிய ஆர்ப்பாட்டம் இடம்பெறுகின்றது.

இந்த ஆர்ப்பாட்டம் காரணமாக மட்டக்களப்பு – கல்முனை வீதி தடைப்பட்டுள்ளதால், வாகனங்களை மாற்று வீதிகளில் அனுப்புவதற்கு காவல்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்