மட்டக்களப்பு ஏறாவூர் பகுதிக்கு கொண்டுவரப்பட்ட மாட்டிறைச்சி முற்றாக அழிப்பு

-மூதூர் நிருபர்-

மட்டக்களப்பு ஏறாவூர் பகுதிக்கு நேற்று வியாழக்கிழமை சுகாதாரமற்ற முறையில் வாகனத்தில் கொண்டுவரப்பட்ட மாட்டிறைச்சி முற்றாக அழிக்கப்பட்டுள்ளது.

மூதூர் – தோப்பூரிலிருந்து ஏறாவூர் நோக்கி சுகாதாரமற்ற முறையில் மாட்டிறைச்சிகள் வாகனமொன்றில் கொண்டு செல்லப்படுவதாக விசேட அதிரடிப்படையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது இவை கைப்பற்றப்பட்டுள்ளன.

இதனை தொடர்ந்து மூதூர் நீதவான் நீதிமன்ற பதில் நீதிபதி எம்.எம்.நஸ்லீம் முன்னிலையில் முன்னிலைப்படுத்தப்பட்டு சுகாதார பரிசோதனையின் பின்னர் குறித்த இறைச்சிகள் சுகாதரமற்ற முறையில் இருந்தமையால் 654 கிலோ கிராம் மாட்டு இறைச்சிகளையும் அழிப்பதற்கு மூதூர் நீதிமன்ற பதில் நீதிவான் நேற்று உத்தரவிட்டுள்ளார்.

மேலும் வாகனத்தில் கொண்டு சென்ற இருவருக்கும் தலா 20 ஆயிரம் தண்டப்பணமும் விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் குறித்த இறைச்சிகள் நேற்று இரவு மூதூர் நீதிமன்ற வளாகத்தில் அதிகாரிகள் முன்னிலையில் பெக்கோ இயந்திரம் மூலம் புதைக்கப்பட்டது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்