மட்டக்களப்பு இந்துக் கல்லூரியின் மாணவர் தலைவர்களுக்கு சின்னம் சூட்டும் நிகழ்வு

மட்டக்களப்பு இந்துக் கல்லூரியின் மாணவர் தலைவர்களுக்கு  சின்னம் சூட்டும் நிகழ்வு இன்று வியாழக்கிழமை காலை இடம்பெற்றது.

பாடசாலை அதிபர் கே பகீரதன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், மட்டக்களப்பு கல்வி வலயத்தின் உடற்கல்வி உதவிக் கல்விப் பணிப்பாளரும்,  பாடசாலை மேம்பாட்டு திட்ட இணைப்பாளருமான வி லவக்குமார் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்

நிகழ்வில் மாணவர் தலைவர்களுக்கு பிரதம அதிதி, அதிபர் மற்றும் ஆசிரியர்கள் சின்னங்களை சூட்டினர்.

 

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்