மட்டக்களப்பிலிருந்து இடம்பெறும் புகையிரத போக்குவரத்திற்கு எவ்வித தடையுமில்லை

மட்டக்களப்பிலிருந்து இடம்பெறும் புகையிரத போக்குவரத்து சேவை எவ்வித தடையுமின்றி இடம்பெறுவதாக மட்டக்களப்பு பிரதான புகையிரத நிலைய அதிபர் ஏ.பேரின்பராஜா எமது செய்தி சேவைக்கு தெரிவித்திருந்தார்.

இதேவேளை மன்னம்பிட்டி – மகாஓயா வீதி மூடப்பட்டுள்ளமையினால் மன்னம்பிட்டிக்கும் பொலநறுவைக்கும் இடையில் விசேட ரயில் சேவை தொடர்ச்சியாக இடம்பெற்று வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

அரலகங்வில பிரதேசத்தில் பாலமொன்று உடைந்து வீழ்ந்த காரணத்தினால் பொலனறுவை – அம்பாறை வீதி போக்குவரத்து பாதிக்கப்பட்ட நிலையில் மன்னம்பிட்டி – மகாஓயா வீதி மூடப்பட்டமை குறிப்பிடதக்கது.

மேலும் இதுவரையிலும் எந்தவிதமான இடையூறுகளும் இன்றி மட்டக்களப்பு மார்க்கமான ரயில் போக்குவரத்து இடம்பெற்று வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.