மட்டக்களப்பில் 7 வயது சிறுமி தந்தையால் பாலியல் துஷ்பிரயோகம்

மட்டக்களப்பு பிரதேசத்தில் 7 வயது சிறுமி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த சிறுமியின் தந்தை மற்றும் மாமனார் ஆகிய இருவரை நேற்று வெள்ளிக்கிழமை கைது செய்ததுடன் பாதிக்கப்பட்ட சிறுமியை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த சிறுமியின் தாயார் கடந்த 3 மாத்திற்கு முன்னர் உயிரிழந்துள்ள நிலையில் தந்தையாருடன் வாழ்ந்து வந்த சிறுமியை 49 வயதுடைய தந்தையாரும் 52 வயதுடைய சிறுமியின் மாமனாரும் இணைந்து கூட்டாக பாலியல் துஷ்பிரயோகம் மேற் கொண்டுவந்துள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இதில் கைது செய்யப்பட்ட இருவரையும் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டபோது இருவரையும் எதிர்வரும் 27 ம் திகதி வரை 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்குமாறும் சிறுமியை சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்