மட்டக்களப்பில் 192 பேருக்கு காணி உறுதிகளையும் 252 பேருக்கு ஆசிரியர் நியமனங்களையும் ஜனாதிபதி வழங்கி வைத்தார்

20 இலட்சம் காணி உறுதிகள் வழங்கும் தேசிய வேலைத் திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு மாவட்டத்தின் 13 பிரதேச செயலகப் பிரிவுகளைச் சேர்ந்த தகுதிபெற்ற 27,595 பேரில் 192 பேருக்கு காணி உறுதிகளை வழங்கும் நிகழ்வு, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் புதிய கட்டடத்தில் இன்று நடைபெற்றது.

மேலும், உயர் தேசிய பொறியியல் நிறுவனத்தின் 252 ஆங்கில டிப்ளோமாதாரர்களுக்கு ஜனாதிபதி தலைமையில் ஆசிரியர் நியமனங்கள் வழங்கப்பட்டன.

மேலும் மட்டக்களப்பு திராய்மடுவில் 1,055 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட மட்டக்களப்பு மாவட்ட செயலகத்திற்கான புதிய கட்டிடத்தை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று சனிக்கிழமை திறந்துவைத்தார்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்