மட்டக்களப்பில் வேலையற்ற பட்டதாரிகள் ஆர்ப்பாட்டம்

மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் சங்கம் இன்று செவ்வாய்க்கிழமை கவனயீர்ப்பு ஆi;ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.
மட்டக்களப்பு காந்தி பூங்காவில் இடம்பெற்ற இப்போராட்டத்தில் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவால் அங்கீகரிக்கப்பட்ட பட்டம் பெற்ற பட்டதாரிகள் கலந்து கொண்டிருந்தனர்.
தங்கள் அனைவருக்கும் நியமனங்கள் வழங்கும்படியும், ஏனைய மாகாணங்களில் ஆயிரக்கணக்கில் நியமனங்களை வழங்கும் போது கிழக்கு மாகாணத்தில் மட்டும் நூற்றுக்கணக்கில் தான் நியமனங்கள் வழங்கப்படுகின்றன, என்று போராட்டத்தில் ஈடுபட்ட பட்டதாரிகள் தெரிவித்தனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்