மட்டக்களப்பு – கல்முனை வீதி போக்குவரத்து தடை?
மட்டக்களப்பு மாவட்டத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை இரவு பெய்த தொடர்ச்சியான மழை காரணமாக ஆற்று நீர் வீடுகளுக்குள் புகுந்துள்ளது.
நேற்று பெய்த கன மழை காரணமாக மட்டக்களப்பு லேடி மனிங் றைவ் வீதி, உப்போடை வாவி வீதி என்பவற்றினுள் ஆற்று நீர் உட்புகுந்த நிலையில் கல்லடி பாலத்தினூடான போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.
இதேவேளை கல்முனையிலிருந்து மட்டக்கப்பு நோக்கி பயணித்த பேருந்துகள் மற்றும் ஏனைய வாகனங்கள் கல்லடி பாலத்தில் தரித்து நீண்ட நேரம் நின்றதுடன், மட்டக்களப்பிலிருந்து கல்முனை நோக்கி பயணித்த வாகனங்களும் அரசடி பகுதியில் நீண்ட நேரம் தரித்து நின்றதை அவதானிக்க முடிந்தது.
இதனையடுத்து போக்குவரத்து பொலிஸார் குறித்த பகுதியில் ஏற்பட்டிருந்த வாகன நெரிசலை சீர் செய்தனர்.