சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தேடும் பணியில் விமானப்படை தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் வெள்ளப் பெருக்கு ஆபத்தில் சிக்கியுள்ள மக்களை மீட்கும் பணி தொடர்ந்து இடம்பெற்று வருகின்றது.
இந்நிலையில், செங்கலடி பிரதேச செயலக பிரிவில் மாவடிஓடையில் வெள்ளத்தில் சிக்குண்டு வீட்டுக் கூரை மீது ஏறி உயிருக்கு போராடிய நபரை விமானப்படையினர் ஹெலிகப்டர் ஊடாக மீட்டுள்ளனர்!
இலக்கம் 7 படைப்பிரிவில் இருந்து பெல் 212 ஹெலிகப்டர் மூலம் ஏறாவூர், மயிலவட்டவான் ஆகிய பகுதிகளில், பாதிக்கப்பட்டிருந்த பொதுமக்களை விமானப்படையினர் மீட்டு, மட்டக்களப்பு விமானப்படைக்கு பாதுகாப்பாக அனுப்பி வைத்ததாக விமானப்படை தகவல்கள் தெரிவிக்கின்றன