மட்டக்களப்பில் மின்சார கட்டணம் தொடர்பில் மக்களின் கருத்துக்களை அறியும் நிகழ்வு!

மட்டக்களப்பு மாவட்டத்தில், மின்சார கட்டணம் தொடர்பில் மக்களின் கருத்துக்களை அறியும் நிகழ்வு, இன்று புதன்கிழமை மாவட்ட செயலகத்தின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவினால், இலங்கை மின்சார சபைக்கு, அடுத்த ஆறு மாதங்களுக்கு 11 சதவீதத்தினால் மின்கட்டணங்களை குறைப்பதற்கான பரிந்துரையை வழங்குவது தொடர்பாக, மக்களின் கருத்தை அறியும் செயற்பாடு முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

அதன்படி,  குறித்த நிகழ்வு இன்று மட்டக்களப்பு மாவட்டத்தில் இடம் பெற்றது.

மின்கட்டண குறைப்பு தொடர்பில் கருத்துகளை முன்வைக்க,  அமைப்புகளுக்கும் மற்றும் தனிநபர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வில், பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் அதிகாரிகள் கலந்து கொண்டதுடன், மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள பல அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டு, மின்கட்டண குறைப்பு தொடர்பில் தமது கருத்துக்களை தெரிவித்தனர்.