
மட்டக்களப்பில் மாணவர்களுக்கு அரிசி மூடைகள் வழங்கி வைப்பு
-மட்டக்களப்பு நிருபர் –
மட்டக்களப்பு மாவட்டம் பட்டிருப்பு வலயக் கல்வி அலுவலகத்தின் கீழுள்ள பாடசாலை மாணவர்களுக்கு இலைக்கஞ்சி செய்து சத்துணவு வழங்குவதற்காக இன்று திங்கட்கிழமை ஒருதொகுதி அசிரி மூடைளையும், நிதி உதவியையும் வழங்கி வைக்கப்பட்டன.
பிரபல வர்த்தகரும், சமூகசேவையாளருமான, லயன் தவஞானசூரியம் களுவாஞ்சிகுடி நகர லயன்ஸ் கழககத்தின் ஊடாக இவ்வுதவி மேற்கொள்ளப்பட்டன.
இதன்போது தலா 30 கிலோ நிலையுடை 159 அரிசிமூடைகளும், 3 இலெட்சம் ரூபாய் நிதியும் பட்டிருப்பு கல்வி வலயத்தின் நிருவாகத்திற்குப் பொறுப்பான பிரதிக் கல்விப்பிப்பாளர் எஸ்.மகேந்திரகுமாரிடம் வழங்கி வைக்கப்பட்டன.
கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் திருமதி.நகுலேஸ்வரி புள்ளநாயகம் அவர்களின் வழிகாட்டலில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதிக்கல்விப் பணிப்பாளர்களான பி.திவிதரன், எம்.எச்.ரிபாசா கோட்டக்கல்விப் பணிப்பாளர் ரி.அருள்ராசா, களுவாஞ்சிகுடி நகர லயன்ஸ் கழககத்தின் தலைவர் ந.சஞ்ஜீவ், பாடசாலை அதிபர்கள், லயன்ஸ் கழக உறுப்பினர்கள் உள்ளிட்ட பலரும் இதன்போது கலந்து கொண்டிருந்தனர்.
லயன் தவஞானசூரியம் அவர்களினால் களுவாஞ்சிகுடி நகர லயன்ஸ் கழகத்தினூடாக தமக்குக் கிடைக்கப் பெற்றுள்ள அரிசி, மற்றும் நிதி உதவிகளை பட்டிருப்பு வலயத்தின் கீழுள்ள போரதீவுப் பற்றுக் கோட்டம், மற்றும் மண்முனை தென் எருவில் பற்றுக் கோட்டங்களிலுள்ள 70 பாடசாலைகளுக்கு பகிர்ந்தழித்து இதனை மாணவர்களிக் போசாக்கு வளர்ச்சிக்கு இலைக் கஞ்சி தயார் செய்து வழங்கவுள்ளதாக இதன்போது கல்வி அதிகாரிகள் தெரிவித்தனர். இதன்மூலம் வறுமைக்கோட்டின் கீழுள்ள மாணவர்களின் போசாக்கு விருத்தி ஊக்கமாகக் கற்றல் இடைவிலகல்களைத் தவிர்த்தல் இணைப்பாட விதானங்களில் மாணவர்களின் நாட்டங்களை அதிகரிக்கும் எனவும் தமது கல்வி அலுவலகத்தின் கீழுள்ள பாடசாலை மாணவர்களின் நன்மை கருத்தி இப்பேருதவிதைய நல்கிய லயன் தவஞானசூரியம் அவர்களுக்கும் இதனை ஏற்பாடு செய்து களுவாஞ்சிகுடி நகர லயன்ஸ் கழகத்திற்கும் இதன்போது நன்றிகளை கல்வி அதிகாரிகள் தெரிவித்தனர்.