மட்டக்களப்பில் பெருமளவான வெடிபொருட்கள் மீட்பு

மட்டக்களப்பு கரடியனாறு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காரைக்காடு பகுதியில் இன்று வியாழக்கிழமை  மேற்கொள்ளப்பட்ட அகழ்வுப் பணியின் போது 20,000 ரி56 ரக துப்பாக்கி ரவைகளும், 300 கன்னி வெடிகளும், 38 வெடி மருந்து பொருட்களும் மீட்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாவட்ட விசேட அதிரடிப்படையின் பொறுப்பதிகாரி டபிள்யூ ஏ ஏ பி சம்பத் குமாரவுக்கு கிடைத்த இரகசிய தகவலினடிப்படையில்,  விசேட அதிரடைப்படையின் பொறுப்பதிகாரி பொலிஸ் அத்தியட்சகர் வர்ண ஜயசுந்தரவின் மேற்பார்வையில், அம்பாறை கட்டளைத்தளபதி, உதவி கட்டளை அதிகாரி பீ.குணசியின் தலைமையின் கீழ் குறித்த அகழ்வுப்பணி இடம்பெற்றது.

ஏறாவூர் சுற்றுலா நீதிமன்ற நீதிபதியின் உத்தரவுக்கமைய, வாழைச்சேனை உதவி பொலிஸ் அத்தியட்சகர் கே ஜீ லக்மல் குமார, கல்லடி, களுவாஞ்சிகுடி, வவுணதீவு அகிய பிரிவுகளின் விசேட அதிரடிப்படையினர் இணைந்து குறித்த அகழ்வுப்பணியினை மேற்கொண்டனர்.

இதன்போதே குறித்த வெடிபொருட்கள் மீட்கப்பட்டது.

மீட்கப்பட்ட வெடிப்பொருட்களை கரடியனாறு பொலிஸார் பொறுப்போற்று நீதிமன்றுக்கு சமர்ப்பிக்கவுள்ளனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்