மட்டக்களப்பில் பூரண உரித்து அளிப்பு முன்னேற்ற கலந்துரையாடல்

 

மட்டக்களப்பில் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் தலைமையில் பூரண உரித்து அளிப்பு முன்னேற்ற கலந்துரையாடல் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரன் ஏற்பாட்டில் பழைய மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நேற்று திங்கட்கிழமை இடம் பெற்றது.

அதிமேதகு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் எண்ணக்கருவில் உதித்த உறுமய தேசிய வேலைத் திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு மாவட்டத்தில் 14 பிரதேச செயலக பிரிவுகளில் காணி உரிமம் அற்ற மக்களிற்கு பூரண உரித்து அளிப்பு வழங்கல் தொடர்பாக அதிகாரிகளுடன் கலந்துரையாடல் இடம் பெற்றது.

இதன் போது கருத்து தெரிவித்த கிழக்கு மாகாண ஆளுநர்,

காணியற்ற மக்களுக்கு துரித கதியில் பூரண உரித்து அளிப்பை வழங்குவதற்கு அதிகாரிகள் வினைத்திறனாக செயற்பட வேண்டும் என பணிப்புரை விடுத்ததுடன், மாவட்டத்தில் விவசாயத்துறை, மீன்பிடி துறையினை மேம்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகள் மேற்கொண்டு வருவதாக, தெரிவித்தார்.

இந் நிகழ்வில் கிழக்கு மாகாண காணி ஆணையாளர் தசநாயக்க,  ஆளுநர் செயலாளர் எல்.பி.மதநாயக்க, மேலதிக அரசாங்க அதிபர் திருமதி நவருபரஞ்சினி முகுந்தன் (காணி), பிரதேச செயலாளர்கள், உதவி பிரதேச செயலாளர்கள், காணி உத்தியோகத்தர்கள், குடியேற்ற உத்தியோகத்தர்கள், வெளிக்கள போதனாசிரியர், என பலர் கலந்து கொண்டனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்