மட்டக்களப்பில் பாடசாலைகளிலிருந்து திருப்பி அனுப்பப்பட்ட மாணவர்கள்

-அலுவலக நிருபர்-

நாடளாவிய ரீதியில் அதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஆசிரிய ஆலோசகர்கள் இன்று புதன்கிழமை சுகயீன விடுமுறை போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

இந்நிலையில் மட்டக்களப்பு நகர் பகுதியில் உள்ள பாடசாலைகளில் ஆசிரியர்கள் பாடசாலைக்கு சமூகமளிக்காத நிலையில் மாணவர்கள் வழமை போன்று பாடசாலைக்கு சென்றுள்ளனர்.

அதன்பின் மாணவர்கள் வீடுகளுக்கு திருப்பி அனுப்பப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

அரசாங்கத்துடன் சம்பள முரண்பாடுகள் தொடர்பில் நடாத்தப்பட்ட பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்ததன் காரணமாக அதிபர்கள், ஆசிரியர்கள், ஆசிரிய ஆலோசகர்கள் சுகவீன விடுமுறை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

 

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்