மட்டக்களப்பில் பலத்த காற்றினால் மின்சாரம் தடை?

மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை முதல் பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்து வருவதால் மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களின் பல பகுதிகளில் சேதங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் , பல பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாகவும், அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.

மட்டக்களப்பு மாவட்டத்தில் வீசிய கடும் காற்றினால் மின்கம்பங்களுக்கு அருகில் மரங்கள் முறிந்து வீழ்ந்துள்ளமையினால் பலபகுதிகளில் மின்சாரம் தடைப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மின்சாரசபையின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

சேதவிபரங்கள் குறித்த எவ்வித தகவல்களையும் தற்போது வரை பெறமுடியவில்லை.