மட்டக்களப்பில் நடைபெற்ற சித்திரப் போட்டியும், காட்சிப்படுத்தலும்

-மட்டக்களப்பு நிருபர்-

இளையோர், வளர்ந்தோர் ஒன்றிணைந்து பங்குபெறும் சித்திரப் போட்டியும், காட்சிப்படுத்தலும் இலங்கை தேசிய சமாதானப் பேரவை மற்றும் எகெட் ஹரித்தாஸ் நிறுவனத்தின் ஏற்பாட்டில் நேற்று வியாழக்கிழமை இடம் பெற்றது.

“கலை வழியாய் சமாதானம் வளர்ப்போம்”, “சமூகத்தில் சுதந்திரம் சமாதானம் சகவாழ்வு” போன்ற உயரிய பண்புகளை மையப்படுத்தி “சித்திரங்கள் வாயிலாக பிரிதிபலிப்போம்” எனும் தொனிப்பொருளில் இந் நிகழ்வு இடம் பெற்றது.

செங்கலடி பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட மக்களிடம் சகோதரத்துவத்தை மேம்படுத்தும் நோக்கில் இந் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.

இதன் போது வரையப்பட்ட கண்கவர் ஓவியங்கள் மட்டக்களப்பு காந்திப்பூக்காவில் மக்கள் பார்வைக்காக காட்சிப்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

இந் நிகழ்வில் ஏகெட் ஹரித்தாஸ் நிறுவன இயக்குனர் அருட்தந்தை எஸ்.எல். ஜெய நிக்சன் அடிகளார், இலங்கை சமாதானப் பேரவையின் கண்காணிப்பிற்கும் மதிப்பாய்விற்குமான உத்தியோகத்தர் என்.கிரிஸ்ணகுமார், வண்ணாத்துப் பூச்சிப் பூங்கா நிறுவனத்தின் வளவாளர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்