மட்டக்களப்பில் சர்வதேச மாற்று திறனாளிகள் தின நிகழ்வு
சர்வதேச மாற்று திறனாளிகள் தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பு போரதீவு பற்று பிரதேச செயலகமும் கதிரவன் மாற்று திறனாளிகள் அமைப்பும் இணைந்து நடாத்தும் மாற்று திறனாளிகளுக்கும் , மாற்று திறனாளிகள் குடும்ப மாணவருக்கான கற்றல் உபகரணங்கள் மற்றும் அன்பளிப்பு பொருட்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு இன்றைய தினம் புதன் கிழமை வெல்லாவெளி கலாசார மண்டபத்தில் இடம்பெற்றது.
இந் நிகழ்வு கதிரவன் மாற்று திறனாளிகள் அமைப்பின் தலைவர் ம. சுதாகரன் தலைமையில் இடம்பெற்றதுடன் , இந் நிகழ்விற்கு பிரதம அதிதியாக மட்டக்களப்பு போரதீவு பற்று பிரதேச செயலாளர் ரங்கநாதன் , போரதீவு பற்று பிரதேச சபை செயலாளர் பகிரதன் என்போர் கலந்து சிறப்பித்தனர்.
இதன் போது மாற்று திறனாளிகளுக்கு பல்வேறு அன்பளிப்பு பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டது டன் , மாற்று திறனாளிகள் குடும்ப பாடசாலை மாணவர்களுக்கு பாடசாலை கற்றல் உபகரணங்களும் வழங்கி வைக்கப்பட்டது.