மட்டக்களப்பு மாவட்டத்தில் சஜித் பிரேமதாச வெல்வதற்கு தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் தலைவர் பிள்ளையான் ஒரு சவாலாக இருக்க மாட்டார் என ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவர் எம் எல் ஏ எம் ஹிஸ்புல்லா தெரிவித்துள்ளார்.
“அரசியலின் மறுபக்கம்” அரசியல் நேர்காணலில் கலந்து கொண்டிருந்த போது, மட்டக்களப்பில் தமிழர்கள் மத்தியில் சஜித் பிரேமதாசவுக்கு இருக்கும் ஆதரவு தொடர்பில் வினவிய கேள்விக்கு பதிலளிக்கையில் அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இலங்கை தமிழரசுக்கட்சியின் ஆதரவுடன், முஸ்லிம் காங்கிரஸின் ஆதரவும் சேர்ந்து, மட்டக்களப்பு தமிழ், முஸ்லிம் மக்களின் வாக்குகளில் 80 வீதமானவை சஜித் பிரேமதாசவிற்கே வழங்கப்படும், என அவர் மேலும் நம்பிக்கை தெரிவித்தார்.
எம் எல் ஏ எம் ஹிஸ்புல்லா கலந்து கொண்ட “அரசியலின் மறுபக்கம்” நிகழ்ச்சியின் முழுமையான காணொளி
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்