மட்டக்களப்பில் கால்நடைகள் தங்கும் இடமாக மாறிய பாதை

மட்டக்களப்பு அரசடி பிரபல தனியார் வைத்தியசாலைக்கு அருகில் உள்ள வீதியின் நடுவில் கால்நடைகள் தங்குவதால் குறித்த வீதியினூடான போக்குவரத்தின் போது விபத்துக்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

குறித்த பகுதி மிகவும் பரபரப்பாக வார நாட்களின் எல்லா நேரங்களிலும் இயங்கி கொண்டு இருப்பதுடன் குறித்த பகுதியில் சுற்று வட்டம் ஒன்று இருப்பதால் இவற்றை கடந்து செல்லும் வாகனங்கள் அதிகமாக காணப்படும். இந் நிலையில் இவ்வாறு கால்நடைகள் வீதியில் காணப்படுவது போக்குவரத்திற்கு பாதிப்பாக உள்ளது.

எனவே குறித்த கால்நடைகள் தொடர்பாக பொறுப்பு வாய்ந்த அதிகாரிகள் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வது எதிர்காலத்தில் இடம்பெறும் விபத்துக்களில் இருந்து மக்களை பாதுகாக்க உதவும்.