மட்டக்களப்பில் காட்டு யானையின் தாக்குதலுக்கு குடும்பஸ்தர் பலி

மட்டக்களப்பு போரதீவுப்பற்று, வெல்லாவெளி பகுதியில் இன்று திங்கட்கிழமை காட்டு யானை தாக்கியதில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்

வெல்லாவெளி பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட 37ஆம் கிராமம், பாலையடிவட்டை பகுதியில் இடம்பெற்ற இச்சம்பவத்தில் , மூன்று பிள்ளைகளின் தந்தையான இராசதுரை ரஜீகரன் (வயது-31) என்பவரே உயிரிழந்துள்ளார்.

வீட்டில் உறக்கத்தில் இருந்தவர் வெளியில் பாரிய சத்தம் கேட்டு வெளியில் வந்த நிலையில் காட்டுயானையின் தாக்குதலுக்கு இலக்கானதாக தெரியவருகின்றது.

காட்டு யானையின் தாக்குதலுக்கு இலக்கான நிலையில் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் அனுதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக வெல்லாவெளி பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இச்சம்பவம் தொடர்பாக வெல்லாவெளி பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றார்.

மின்னல்24 இணைய வானொலி
கேட்க கிளிக் செய்க