மட்டக்களப்பில் ஐக்கிய மக்கள் சக்தியின் தேர்தல் பிரச்சார மேடை மீது செருப்பு மற்றும் கல் வீச்சு
மட்டக்களப்பு ஏறாவூர் பிரதேசத்தில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஐக்கிய மக்கள் சக்தியின் தேர்தல் பிரச்சார கூட்ட மேடையில் செருப்பு மற்றும் கல் வீச்சு தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது.
சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் தலைமையில் இந்த கூட்டம் ஒழுங்கு செய்யப்பட்ருந்த நிலையில் ரவூப் ஹக்கீம் மேடையில் பேசிக்கொண்டிருந்த போதே இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது.
திகன கலவரத்தின் சூத்திரதாரி, இஸ்லாமிய தீவிரவாத அமைப்பு முஸ்லிம்கள் என்று கூறிய சம்பிக்க ரணவக்க ஐக்கிய மக்கள் சக்தியிலே கூட்டு சேர்ந்து இருக்கிற போது இரண்டு முஸ்லிம் தலைவர்களான ரவூப் ஹக்கீம், ரிசாட் பதியுதீன் சஜித்துடன் சேர்ந்திருப்பது போராளிகளுக்கு மன உளைச்சலை ஏற்படுத்தியமையினாலேயே சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் போராளிகளே இந்த செயலை செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்