
மட்டக்களப்பில் இலங்கை சாரணர் சங்கத்தின் தேசிய பொங்கல் விழா!
இலங்கை சாரணர் சங்கத்தின் தேசிய பொங்கல் விழா, சாரணர் சங்க மட்டு கிளையின் ஏற்பாட்டில், மட்டக்களப்பு காந்தி பூங்காவில் இன்று சனிக்கிழமை, கொட்டும் மழையில் இடம்பெற்றது
பொங்கல் விழாவில் பிரதம அதிதியாக மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜே.ஜே. முரளீதரன், அதிதிகளாக இலங்கை சாரணர் சங்க மட்டக்களப்பு தலைவர் வை.ஜெயசந்திரன், சாரணர் பயிற்றுவிப்பாளர் தினேஷ் மானவடு, மண்முணைவடக்கு பிரதேச செயலாளர் திருமதி வில்வரத்தினம், மட்டக்களப்பு மாநகர சபை ஆணையாளர் என்.தனஞ்சயன், உள்ளுராட்சி பிரதி ஆணையாளர் எஸ்.பிரதீபன், மற்றும் வலயக்கல்வி பணிப்பாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்
இதில் பொதுமக்கள் உட்பட பெருந்தரளானோர் கலந்து கொண்டு சம்பிராய பூர்வமாக பாரம்பரிய முறையில் பொங்கல் விழா ஆரம்பித்ததுடன் கலாச்சார நடனங்கள் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்