மட்டக்களப்பில் இடர் முகாமைத்துவ குழு கூட்டம்

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்-

வட கீழ் பருவ பெயர்ச்சி மழைக்கான தயார்படுத்தல் தொடர்பான விசேட கலந்துரையாடல் மட்டக்களப்பில் இடம்பெற்றது.

மட்டக்களப்பு மாவட்டச் செயலாளரும் மாவட்டத் தெரிவத்தாட்சி அலுவலருமான ஜஸ்டினா ஜுலேகா தலைமையில் மாவட்ட இடர் முகாமைத்துவப் பிரிவின் பிரதி பணிப்பாளர் ஏ.எஸ் எம். சியாத் ஏற்பாட்டில் இக்கூட்டம் இடம்பெற்றது.

கலந்துரையாடலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் பருவ பெயர்ச்சி மழைக்கான தயார்படுத்தல் நடவடிக்கையாக மாவட்ட மட்டத்தில், இடர்களுக்குத் தயார்படுத்தல் மற்றும் இடர் முன்னெச்சரிக்கை போன்ற பணிகளுக்கான முன்னாயத்த நடவடிக்கை தொடர்பாக இதன்போது விரிவாக கலந்துரையாடப்பட்டன.

இந்நிகழ்வில் மத்திய நீர்ப்பாசன திணைக்கள பெறியியலாளர் எம்.ஐ.எம். இப்றாஹிம், இலங்கை மின்சார சபையின் உயரதிகாரிகள், மாவட்ட செயலக அதிகாரிகள், பிராந்திய சுகாதார சேவைகள் அதிகாரிகள், கல்வி திணைக்கள அதிகாரிகள், மீன்படி, விவசாய நீர்ப்பாசன திணைக்களங்களின் அதிகாரிகள், வீதி அபிவிருத்தி அதிகார சபை உத்தியோகத்தர்கள், பிரதேச சபைகளின் பிரதிநிதிகள், முப்படையினர் மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள் எனப் பலர்  கலந்துகொண்டனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்