மட்டக்களப்பில் இடம்பெற்ற கராத்தே தேர்வு போட்டிகள்

ஷோடோகான் சம்பியன்ஸ் கராத்தே அக்கடமி நடாத்திய தேர்வு போட்டிகள் நேற்று முன்தினம் சனிக்கிழமை மட்டக்களப்பு வெபர் விளையாட்டு அரங்கிலும் மற்றும் நேற்று ஞாயிற்றுக்கிழமை ஓந்தாச்சிமட மண்டபத்திலும் இடம்பெற்றது.

ஷோடோகான் சம்பியன்ஸ் கராத்தே அக்கடமி ஒழுங்குபடுத்தலின் கீழ் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை காலை 9.00 மணி தொடக்கம் 4.00 மணி வரை தேர்வு போட்டிகள் இடம்பெற்றது.

இலங்கை தேசிய நடுவரும், டான் பிளாக் பெல்ட் தலைமை பயிற்றுவிப்பாளருமான சென்செய் எச்.ஆர்.சில்வா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் தர உயர்வு பெற்ற மாணவர்கள், பெற்றோர்கள் நிறுவன முக்கியஸ்தர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர். மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்