மட்டக்களப்பின் முக்கிய ஆலயங்கள் தொடர்பில் வெளியாகும் தகவலில் உண்மையில்லை!

மட்டக்களப்பு மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள முக்கிய ஆலயங்கள் நிவாரண நிதி வழங்கியுள்ளதாக பரப்பப்படும் செய்தி உண்மையில்லை என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் ஆலய அறங்காவலர்கள் ஒரு கோடியும், மாமாங்கேஸ்வரர் ஆலய அறங்காவலர்கள் 150 இலட்சம் ரூபாயும், களுதாவளை சுயம்புலிங்கேஸ்வரர் ஆலய நிர்வாகத்தினர் 1 கோடி ரூபாய் நிதியையும், மட்டக்களப்பு மாவட்டத்தில் வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கியுள்ளதாக தகவல் பரப்பப்பட்டுள்ளது.

சமூக வலைத்தளங்களில் இன்று வெள்ளிக்கிழமை அதிகளவாக இச்செய்தி பரப்பட்டு வருகின்றது.

இந்நிலையில் இவ்விடயம் தொடர்பில் குறித்த ஆலயங்களின் நிர்வாகத்தினரை எமது செய்திப்பிரிவு தொடர்புகொண்டு வினவிய போது, அவ்வாறான ஒரு நிதியும் தமது ஆலயத்தினால் வழங்கப்படவில்லை என தெரிவித்துள்ளனர்.