மடுவிற்கு யாத்திரை சென்ற இளைஞன் நீரில் மூழ்கி மாயம்

மன்னார் – குஞ்சிகுளம் பகுதியில் நேற்று திங்கட்கிழமை குளித்துக் கொண்டிருந்த போது இளைஞன் ஒருவன் காணாமல் போயுள்ளார்.

புஸ்ஸல்லாவ பகுதியை சேர்ந்த 23 வயதுடைய இளைஞன் ஒருவனே இவ்வாறு காணாமல் போயுள்ளார்.

மன்னார் – மடு பகுதிக்கு யாத்திரை சென்ற 5 பேர் கொண்ட குழுவினர் குஞ்சிகுளம் பகுதியில் குளித்து கொண்டிருந்த போதே இந்த இளைஞன் காணாமல் போயுள்ளார்.

காணாமல் போன நபரைத் தேடும் பணியை கடற்படை மற்றும் மடு பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்

Minnal24 FM