மசகு எண்ணெய்யின் விலையில் மாற்றம்

உலக சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை இன்று ஞாயிற்றுக்கிழமை பாரிய வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளது.

உலக சந்தையில் டபிளியு.ரி.ஐ மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 7.41 சதவீதம் வீழ்ச்சியடைந்து 61.99 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது.

பிரெண்ட் மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 65.58 அமெரிக்க டொலராக வீழ்ச்சியடைந்துள்ளது.

இதேவேளை, உலக சந்தையில் இயற்கை எரிவாயுவின் விலை இன்றைய தினம் 3.83 அமெரிக்க டொலராக வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளது.

மின்னல்24 இணைய வானொலி
கேட்க கிளிக் செய்க