மகனால் கீழே தள்ளிவிடப்பட்ட தாய் உயிரிழப்பு!
கம்பஹா மாவட்டத்தில் மகன் கீழே தள்ளிவிட்டதில் படுகாயமடைந்த தாய் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று திங்கட்கிழமை உயிரிழந்துள்ளதாக ராகம பொலிஸார் தெரிவித்தனர்.
ராகம வல்பொல பிரதேசத்தைச் சேர்ந்த தீபா மாலா குமாரி விஜேசிங்க (வயது – 57) என்ற பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
கடந்த 20 ஆம் திகதி வீட்டில் வளர்க்கப்பட்ட நாய்க்குக் கொடுக்கப்பட்ட உணவு கெட்டிருந்தமை தொடர்பில் தாய்க்கும் மகனுக்கும் இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் முற்றியதில் மகன் தாயை கீழே தள்ளியுள்ளார்.
இதன் காரணமாக படுகாயமடைந்த குறித்த தாய் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் நேற்று உயிர் இழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் சந்தேகநபரின் மகன் (வயது – 24) கைது செய்யப்பட்டுள்ளதாக ராகம பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்