ப்ரீ வெட்டிங் ஷூட்டால் ஏற்பட்ட விபரீதம்

இந்தியா – ஹைதாரபாத்தில் உள்ள பஞ்சகுட்டா பொலிஸ் நிலையத்தில் ஆய்வாளராக வேலை செய்யும் பாவனாவும், அதே காவல் நிலையத்தில் ஆயுதப்படை பொலிஸ் ஆய்வாளராக வேலை செய்யும் ராவூரி கிஷனும் காதலித்து வந்தனர்.

பெற்றோர் சம்மதத்துடன் கடந்த மாதம் 26ம் தேதி இருவரும் திருமணம் செய்து கொண்டனர். ஆனால், இருவரும் திருமணத்திற்கு முன்பாக நடத்திய ப்ரீ வெட்டிங் ஷூட்டிங் தான் இப்போது வினையாகியுள்ளது.

Pre-wedding shoot of Hyderabad Cops goes Viral BTW congratulations on your wedding 🌺👌@hydcitypolice #Hyderabad #Police #Telangana #Cyberabad #HyderabadPolice pic.twitter.com/HBzA6DFWbJ — Sushanth kumar (@sushanthkumar24) September 17, 2023

மலைவாழ் இடங்கள், இயற்கை சூழ்ந்த மரங்களுக்கு மத்தியில் ப்ரீ வெட்டிங் சூட்டிங் நடத்தப்படும் நிலையில், பொலிஸ் தம்பதி தேர்ந்தெடுத்தோ தாங்கள் பணியாற்றிய பொலிஸ் நிலையம். அதுவும் பொலிஸ் வாகனத்தை பயன்படுத்தி காவல் நிலையத்திலேயே ப்ரீ வெட்டிங் சூட் நடத்தியதால், பொலிஸ் காதல் தம்பதியிடம் உயரதிகாரிகள் விவரம் கேட்கும் அளவிற்கு சென்றுள்ளது. அதேநேரத்தில் பொலிஸ் தம்பதி மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்