பௌத்த பிக்கு கடத்தப்பட்டார்

கொஸ்கம ஹிங்குரல தெஹிகஹலந்த போதிராஜாராம விகாரையை சேர்ந்த பௌத்த பிக்கு ஒருவர் கடத்தப்பட்டுள்ளதாக முறைப்பாடு கிடைத்துள்ளதாக கொஸ்கம பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

குறித்த விகாரைக்கு நேற்று புதன்கிழமை 11.30 மணியளவில் வந்த சிலர் பௌத்த பிக்குவை கடத்திச் சென்றுள்ளதுடன் இதனை விகாரையில் பணிபுரியும் ஒருவர் பார்த்ததாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும் சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கொஸ்கம பொலிஸார் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.