
போலி வாக்குச்சீட்டுகளுடன் ஒருவர் கைது
புத்தளம் – இரத்மல்யாய பிரதேசத்தில் உள்ள வாக்கெடுப்பு நிலையத்திற்கு அருகில் போலி வாக்குச்சீட்டுகளுடன் சந்தேக நபர் புத்தளம் பொலிஸாரால் இன்று செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.
புத்தளம் பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபரிடமிருந்து 8 போலி வாக்குச்சீட்டுகள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை புத்தளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்