போலியான மணல் அனுமதிப் பத்திரம்: இருவர் விளக்கமறியலில்
-யாழ் நிருபர்-
மணல் அனுமதி பத்திரம் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் பத்திரம் போலியானது என்று கண்டறியப்பட்டதுடன் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கிளிநொச்சி மற்றும் விசுவமடுவைச் சேர்ந்தவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
போலியான அனுமதிப் பத்திரம் என்று தெரிந்தும் அதை ஒருவருக்கு வழங்கியமை, போலியான அனுமதிப் பத்திரம் என்று தெரிந்தும் அதைப் பயன்படுத்தியமை ஆகிய குற்றச்சாட்டுக்களின் கீழ் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
போலியான அனுமதிப் பத்திரம் உருவாக்க 15,000 ரூபா வரையில் அறவிடப்பட்டுள்ளமை விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.
சந்தேகநபர்கள் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.