போராட்டத்தில் கலந்துகொண்ட பொலிஸார் பிணையில் விடுவிப்பு

மக்கள் நடாத்தும் அரசாங்கத்திற்கு எதிரான எழுச்சிப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தமை தொடர்பில் கைது செய்யப்பட்ட பொலிஸ் அதிகாரி பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

இவர் நேற்று வியாழக்கிழமை கோட்டை பொலிஸாரால் கைது செய்யப்பட்டு இன்று வெள்ளிக்கிழமை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். விடுமுறை நாளான இன்று அவருக்காக ஏராளமான நீதிபதிகள் ஆஜராகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்போது குறித்த அதிகாரிக்கு பிணை வழங்கிய நீதிமன்றம், வழக்கை எதிர்வரும் 29 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுக்குமாறு உத்தரவிட்டது.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

Minnal24 FM