
போதை மாத்திரைகளுடன் இருவர் கைது
புத்தளம் – கற்பிட்டி நகரில் நேற்று வியாழக்கிழமை முன்னெடுக்கப்பட்ட விஷேட சுற்றிவளைப்பின்போது போதை மாத்திரைகளுடன் இரு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கற்பிட்டி பொலிஸாருடன் இணைந்து கடற்படையினர் மேற்கொண்ட இந்த நடவடிக்கையின் போதே கற்பிட்டி நகரில் பயணித்த சந்தேகத்திற்குரிய முச்சக்கர வண்டியொன்றை பரிசோதனை செய்துள்ளனர்.
இதன்போது குறித்த முச்சக்கர வண்டியில் சூட்சுமமான முறையில் விற்பனை செய்யும் நோக்கில் எடுத்து செல்லப்பட்டதாக கூறப்படும் 800 போதை மாத்திரைகளுடன் சந்தேக நபர்கள் இருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
கற்பிட்டி – புதுக்குடியிருப்பு மற்றும் ஏத்தாளை பகுதிகளைச் சேர்ந்த 33 மற்றும் 49 வயதுடையவர்களே இதன் போது கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறு கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்கள், அவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட போதை மாத்திரைகள் மற்றும் அவர்கள் பயணிப்பதற்கு பயன்படுத்திய முச்சக்கர வண்டி என்பன மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கற்பிட்டி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்