போதைப் பொருட்களை கடத்திச்செல்ல முற்பட்ட இருவர் கைது

தங்காலை – குடாவெல்ல பகுதியில் ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப்பொருட்களை கடத்த முற்பட்டதாகக் கூறப்படும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை குடாவெல்ல மீன்பிடி துறைமுக நுழைவாயிலுக்கு அருகில் தங்காலை பொலிஸ் போக்குவரத்துப் பிரிவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்டவர்கள் 34 மற்றும் 35 வயதுடையவர்கள் என தெரியவந்துள்ளது.

குடாவெல்ல மீன்பிடி துறைமுகத்திலிருந்து, மீன்களை ஏற்றிச் செல்லும் குளிர்சாதன வசதிகள் அடங்கிய பாரவூர்தியில் குறித்த போதைப் பொருட்கள் கடத்திச் செல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

மின்னல்24 இணைய வானொலி
கேட்க கிளிக் செய்க