போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்ட 3 பேர் கைது

-பதுளை நிருபர்-

ஹெரோயின், ஐஸ் மற்றும் போதை மாத்திரைகளுடன் மூவர் நேற்று சனிக்கிழமை மாலை கைது செய்யப்பட்டுள்ளதாக பதுளை பொலிஸார் தெரிவித்தனர்

பதுளை வினிதகம பகுதியை சேர்ந்த 33,28,26, வயதுடைய சந்தேக நபர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பதுளை விசேட பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைய குறித்த சுற்றி வளைப்பை மேற்கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.

பதுளை புவக்கொடமுல்ல பகுதியில் சந்தேக நபர்கள் வாடகை அடிப்படையில் விடுதியில் தங்கியிருந்து போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபடுவதாக கிடைக்கப்பெற்ற தகவல்களுக்கு அமைய மேற்கொண்ட சுற்றி வளைப்பில் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்களிடமிருந்து ஹெரோயின் போதைப்பொருள் 7130 மில்லிகிராம், ஐஸ் போதைப்பொருள் 617 மில்லிகிராம், போதை மாத்திரைகள் 04 ஆகியன கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபர்களை விசாரணையின் பின்னர் பதுளை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.