போதைப்பொருள் வாங்குவதற்கு பணம் தர மறுத்த மனைவி: குடும்பஸ்தரின் தவறான முடிவு

-யாழ் நிருபர்-

யாழில் போதைப்பொருள் வாங்குவதற்கு மனைவி பணம் கொடுக்காததால் இளம் குடும்பஸ்தர் நேற்று வியாழக்கிழமை தவறான முடிவெடுத்து தூக்கிட்டு உயிர்மாய்த்துள்ளார்.

அராலி – வசந்தபுரம் பகுதியைச் சேர்ந்த பஞ்சலிங்கம் வசந்தகுமார் (வயது – 33) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

குறித்த நபர் நேற்று காலை மனைவியிடம் பணம் கேட்டுள்ளார். அதற்கு மனைவி, தன்னிடம் பணம் இல்லை என கூறியுள்ளார். இதனால் மனவிரக்தியடைந்த குறித்த குடும்பஸ்தர் தவறான முடிவெடுத்து தூக்கிட்டு உயிர்மாய்த்துள்ளார்.

அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.

உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்