போதைப்பொருட்கள் மற்றும் தடைசெய்யப்பட்ட கத்திகளுடன் ஒருவர் கைது

-பதுளை நிருபர்-

மொனராகலை – பிபிலை ரதுபஸ்கெடிய பகுதியில் நேற்று செவ்வாய்க்கிழமை மாலை போதைப்பொருட்கள் மற்றும் தடைசெய்யப்பட்ட கத்திகளுடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பிபிலை பொலிஸார் தெரிவித்தனர்.

ரதுபஸ்கெடிய பிபிலை பகுதியை சேர்ந்த 36 வயதுடைய நபரே இதன் போது கைது செய்யப்பட்டுள்ளார்.

இதன்போது சந்தேக நபரிடம் இருந்து 5 கிராம் 500 மில்லிகிராம் ஹெரோயின், 2 கிராம் 20 மில்லிகிராம் ஐஸ்போதை பொருள், 730 மில்லிகிராம் ஹுஸ் போதைப்பொருள், நியூரோவன் வகை போதை மாத்திரைகள் 27, தடைசெய்யப்பட்ட கத்திகள் 3 ஆகியன கைப்பற்றப்பட்டுள்ளதாக பிபிலை பொலிஸார் தெரிவித்தனர்.

விசாரணைகளின் பின்னர் சந்தேக நபரை பிபிலை நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக பிபிலை பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்

 

மின்னல்24 இணைய வானொலி
கேட்க கிளிக் செய்க