போதைப்பொருட்களுடன் சந்தேகநபர் கைது

காலி – ஹபராதுவ பொலிஸ் பிரிவின் யத்தேஹிமுல்ல பகுதியில் நேற்று சனிக்கிழமை பொலிஸார் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போது, போதைப் பொருட்கள் மற்றும் போதை மாத்திரைகள் என்பவற்றுடன் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் உனவடுன பகுதியைச் சேர்ந்த 27 வயதுடையவராவார்.

இதன் போது, 80 கிராம் ஐஸ் போதைப்பொருள் , 04 கிராம் கொக்கைன் போதைப்பொருள் , 30 கிராம் ஹஷிஷ் போதைப்பொருள் மற்றும் 65 போதை மாத்திரைகளை பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளன.

மேலும், இந்த சம்பவம் குறித்து ஹபரதுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 

மின்னல்24 இணைய வானொலி
கேட்க கிளிக் செய்க