போக்குவரத்துத்துக்கு இடையூறு விளைவிக்கும் பொலிஸார்

 

-யாழ் நிருபர்-

யாழ். வட்டுக்கோட்டை பொலிஸ் காவலில் வைக்கப்பட்டு சித்திரவதைக்குள்ளான சித்தங்கேணி பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில் தாக்குதலுடன் சம்பந்தப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர் இருவருக்கு வெறுமனே இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்திற்கு பல பொலிஸ் நிலையங்களில் இருந்து பொலிஸ் உத்தியோகத்தர்களை வரவழைத்தும்இ பொலிஸ் விசேட அதிரடிப் படையினரை வரவழைத்தும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறு கடமையில் ஈடுபடுத்தப்பட்ட பொலிஸார் வீதி மறியல்களை போட்டு பயணிகளின் போக்குவரத்திற்கு இடையூறு விளைவித்துள்ளனர்.

குறித்த வீதியானது 785 வழித்தட பேருந்தின் பிரதான வீதியாக காணப்படுகிறது. இந்நிலையில் போக்குவரத்துக்கு பொலிஸார் இடையூறாக செயற்பட்டு வருகிறனர் என மக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.