பொலிஸ் நிலையத்தில் இளைஞர் மரணம்: விசாரணையை ஆரம்பிக்க ஆலோசனை

வெலிக்கடை பொலிஸாரால் கைது செய்யப்பட்ட நிலையில் இளைஞரொருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் உடனடியாக விசாரணைகளை ஆரம்பிக்குமாறு பதில் பொலிஸ் மாஅதிபர் குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

மீகஹகிவுல – பஹலகெதர பகுதியைச் சேர்ந்த 26 வயதான இளைஞரொருவரே வெலிக்கடை பொலிஸாரால் கைது செய்யப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.

முன்னெடுக்கப்படும் விசாரணைகளின் இடைக்கால அறிக்கையை எதிர்வரும் 25ஆம் திகதி அல்லது அதற்கு முன்னதாக தம்மிடம் சமர்ப்பிக்க நடவடிக்கை எடுக்குமாறு பதில் பொலிஸ் மாஅதிபர் பிரியந்த வீரசூரிய குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு அறிவித்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் உப பொலிஸ் பரிசோதகரின் தலைமையில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பிராந்தியத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி தெரிவித்தார்.

 

மின்னல்24 இணைய வானொலி
கேட்க கிளிக் செய்க