
பொலிசார் விடுத்துள்ள எச்சரிக்கை
நாடு முழுவதும் இடம்பெற்று வரும் மக்கள் எதிர்ப்பு போராட்டங்களின் போது வன்முறையில் ஈடுபடும் தனிநபர்கள் மற்றும் குழுக்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, பொலிசார் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்களால் முன்னெடுத்து செல்லப்படும் அமைதியான போராட்டங்களின் போது வன்முறை சம்பவங்களில் ஈடுபட்டவர்கள் தொடர்பாக இதுவரை பலர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், குறித்த சம்பவங்கள் தொடர்பான வீடியோ காட்சிகளை மேலும் ஆய்வு செய்த பின்னர் இச்சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் கைது செய்யப்படுவார்கள் எனவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.