பொன் சுதனின் தந்தையின் சிலை உடைப்பு
-யாழ் நிருபர்-
பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர் பொன் சுதனின் தந்தையின் சிலை விசமிகளால் உடைக்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சி இயக்கச்சி பகுதியில் அமைந்துள்ள இராவணன் வனப் பகுதியில் பொன் சுதனால் அவரது தந்தையின் சிலை நிறுவப்பட்டது. இந்த சிலையின் முகப்பகுதியை விசமிகள் சிலர்
கடந்த 21.11.2024 வியாழக்கிழமை உடைத்துள்ளனர்.
சம்பவம் அறிந்து உடனடியாக கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்த போது சம்பவதினம் அன்று சிசிரிவி கேமரா நிறுத்திவைக்கப்பட்டுள்ளதாக பொன் சுதன் தெரிவித்துள்ளார்.
தன்மேல் இருக்கும் அரசியல் முரண்பாட்டால் இந்த சம்பவம் இடம்பெற்றிருக்கலாமெனவும், திடீரென சிசிரிவி கேமரா நிறுத்தப்பட்டதையும் பொலிசாரின் கவனத்திற்கு கொண்டு சென்றதாகவும் தெரிவித்தார்.
சம்பவம் தொடர்பாக பளை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதுடன் பளை பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.