பொன்னாலை இந்து மயானத்தை புனரமைக்கும் பணிகள் ஆரம்பம்

-யாழ் நிருபர்-

பொன்னாலை இந்து மயானத்தை புனரமைக்கும் செயற்பாட்டில், எல்லைக் கட்டைகள் இடுகின்ற பணி ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது.

பொன்னாலை இந்து மயானம் சேதமடைந்து பற்றைகள் சூழ்ந்து காணப்பட்டது.

இதைப் புனரமைக்க உதவுமாறு முகப்புத்தகம் வாயிலாக விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைவாக

காரைநகர் கருங்காலியை சேர்ந்த அமரர் கணேசமூர்த்தி இராஜேஸ்வரி அவர்களின் நினைவாக புலம்பெயர் தேசத்தில் உள்ள அவரது உறவினர் லோ.ஸ்ரீகாந்தன் அனுப்பிய முதற்கட்ட நிதியுடன் இப்புனரமைப்பு 2022 ஜனவரி 30 ஆம் திகதி முதற்கட்ட பணி ஆரம்பமாகியது.