
அம்பாறை பொத்துவில் பிரதேச செயலகத்திற்குட்பட்ட கனகர் கிராமம் பகுதியில் உள்ள மக்கள் இன்று வியாழக்கிழமை ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.
தமது காணிகளை தமக்கு திருப்பி தருமாறு கோரி இவ்வார்ப்பாட்டத்தை முன்னெடுத்திருந்திருந்தனர்.
குறித்த பகுதியில் உள்ள மக்கள் தாங்களட தங்களுடைய காணியில் மீள்குடியேற்றம் செய்யப்பட வேண்டும் என்றும் அவ்வாறு மீள்குடியேற்றம் செய்வதில் தடையாக பிரதேச செயலாளரும் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கலையரசனும் இருக்கிறார்கள் என குற்றம் சாட்டியுள்ளனர்.
இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக எமது செய்தி சேவை நாடாளுமன்ற உறுப்பினர் கலையரசரன தொடர்பு கொண்டு வினவிவ போது அவர் கீழ்கண்டவாறு தெரிவித்தார்.