பொதுவெளியில் புர்கா அணிய தடை
மக்கள் பொதுவெளியில் முகத்தை மறைக்கும் (புர்கா) உள்ளிட்ட உடைகளை அணிய சுவிட்சர்லாந்தில் நேற்று புதன் கிழமை முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது.
சுவிட்சர்லாந்தில் பொதுவெளியில் முகத்தை மறைக்கும் வகையிலான உடை அணிய தடை விதிப்பது குறித்து கடந்த 2021ஆம் ஆண்டு மார்ச் மாதம் பொதுவாக்கெடுப்பு நடத்தப்பட்டது.
இதில் 51 சதவீதமானோர் ஆதரவு தெரிவித்ததால், தற்போது அந்த சட்டம் ஜனவரி 1 ஆம் திகதி முதல் அமுலுக்கு வந்துள்ளது.
இதேவேளை விமானங்கள், தூதரகங்கள், மதவழிபாட்டு தலங்கள், முகத்தை மறைக்காவிட்டால் உடல்நல ரீதியில் பிரச்சினைகள் ஏற்படும் பகுதிகளில் இந்த சட்டம் பொருந்தாது என்று சுவிட்சர்லாந்து அரசு விளக்கம் அளித்துள்ளது.
உடல்நிலை மற்றும் பாதுகாப்பு காரணங்களுக்காக முகத்தை மறைத்துக் கொள்ளலாம். ஆனால் மதரீதியாக அல்லது தட்பவெப்ப நிலை காரணமாக முகத்தை மறைப்பது தடைசெய்யப்பட்டுள்ளது.
பொதுவெளியில் முகத்தை மறைக்கும் உடை அணிந்து சென்றால் அந்நாட்டு பணத்தில் 100 பிரன்சிஸ் அபராதம் விதிக்கப்படும்.
மேலும் இந்த அபராத தொகையை உடனடியாக செலுத்தவில்லையென்றால் 1000 பிரன்சிஸ் (இலங்கை மதிப்பில் 3 இலட்சத்துக்கு மேல்) அபராதம் விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.